டி 20 உலகக்கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். டி 20 உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2023 ஒரு நாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று மக்களின் இதயங்களை வென்றுள்ளது என தெரிவித்தார். மேலும், வரும் டி 20 உலக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். 

varient
Night
Day