கபடி வீரரை சுட்டுக்கொன்ற மர்மகும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூதியானா மாவட்டத்தை சேர்ந்த குர்வீந்தர் சிங் என்பவர் மாவட்ட அளவில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர். இந்த நிலையில் குர்வீந்தர் சிங், சமரலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். மேலும், குர்வீந்தர் சிங் கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Night
Day