ஆபத்தான கட்டத்தை கடந்தார் மருத்துவர் பாலாஜி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி, தாம் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்பவர் நேற்று சரமாரியாக கத்தியால் குத்தினார். பெருங்குளத்தூரை சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கத்தி குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி  நலமுடன் இருப்பதாகவும், அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கிண்டி அரசு மருத்துவனை இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். ஓரிரு நாட்களில் மருத்துவர் பாலாஜி சாதாராண வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாம் நலமுடன் இருப்பதாகவும், உணவு உட்கொள்வதாகவும், மருத்துவர் பாலாஜி கூறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

varient
Night
Day