எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹனிமூன் முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வந்திறங்கிய புதுமண ஜோடியை இளம் பெண் ஒருவர் அடிக்க பாய்ந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை திருமணம் செய்துவிட்டு அவளுடன் ஹனிமூன் போவியா? என இளம் பெண் வசைபாடிய பின்னணி என்ன விவரிக்கிறது செய்தி தொகுப்பு..
காதலனால் ஏமாற்றப்பட்டதாக கூறி ஹனிமூன் முடித்துவிட்ட கோவை திரும்பிய புதுமண ஜோடியை விமான நிலையத்தில் மடக்கி பிடித்து அதிரடி காட்டியிருக்கிறார் இந்த இளம்பெண். ஹனிமூனை முடித்த பூரிப்பில் கையோடு கைகோர்த்து விமானம் நிலையம் வந்திறங்கிய புதுமண ஜோடியோ, என்ன கல்யாணம் பண்ணிட்டு அவ கூட ஹனிமூன் போவியா? என கூறி இளம்பெண் ஆடிய பேயாட்டத்தை பார்த்து அதிர்ச்சியின் உறைந்து நின்றனர்.
அப்போது அங்கு வந்த புளூ சட்டைகாரர் ஒருவர், ரணகளம் செய்த பெண்ணின் கையை இறுக பிடித்துக்கொண்டு, அங்க போங்க இப்புடி போங்க என புதுமண ஜோடிக்கு எஸ்கேப்-ஆக வழிகாட்டினார். இதுதான் சாக்கு என புது மனைவியை அழைத்து கொண்டு காத்திருந்த காரில் ஏறி எஸ்கேப் ஆனார் புதுமாப்பிள்ளையான இளைஞர்.
அப்போது நில்லுடா எங்கடா ஓடுற. என சகட்டு மேனிக்கு வார்த்தைகளை அள்ளிவீசி காரில் எஸ்கேப் ஆன புதுமண ஜோடிகளை வசைபாடிய இளம் பெண், புதுமண ஜோடிகளுக்கு சூனியக்காரியை போல சாபம் விட்டதை பார்த்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரே வாய் அடைத்து போயினர்.
புதுமண ஜோடிகள் காரில் சிட்டாய் பறந்து செல்ல, புளூ சட்டைகாரரை நோக்கி இளம்பெண்ணின் வசைபாடல் திரும்பியது. வாடா, போடா என பல வார்த்தைகளை கொட்டி புளூ சட்டைக்காரரை வறுடுத்த அந்த இளம்பெண், அவன பிடிங்க அவன பிடிங்க என கத்தினார். அதற்குள் புதுமண ஜோடிகள் விமான நிலையத்தை விட்டே பறந்துவிட, நல்லா வீடியோ மட்டும் எடுக்குறீங்க, அவன பிடிக்க சொன்னனே யாராவது பிடிச்சீங்களா.. என சுற்றி இருந்தவர்களையும் ஒருகாட்டு காட்டினார்.
விமான நிலையத்தில் இருந்து பதற்றத்துடன் எஸ்கேப் ஆன இளைஞர் கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் என கூறப்படுகிறது. இந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளம்பெண் தான் விமான நிலையத்தில் அவர்களை வசைபாடிய அந்த பெண் என போலீசார் கூறுகின்றனர்.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்த நிலையில் இந்த விவரம் இளைஞரின் பெற்றோருக்கு தெரியவர சினிமாவில் வரும் வழக்கமான சீன் தான் நடந்திருக்கிறது. தங்களது அந்தஸ்துக்கு ஏத்த இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர் இளைஞரின் பெற்றோர். ஆனால் தங்களது திருமணத்துக்கு இன்ஸ்டா காதலி இடைஞ்சலாக வந்துவிட கூடாது என்பதற்காக முதலில் அவருக்கு தாலி கட்டி சமாதானப்படுத்திய இளைஞர் அதன்பிறகே பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணுக்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது. மிக பிரம்மண்டமாக நடந்த அந்த திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்திய இளம்பெண் அங்கு நடப்பதையும் நோட்டமிட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் தான் புது மனைவியோடு லயித்துப்போன இளைஞர் இன்ஸ்டா காதலியை தவிர்க்க ஆரம்பித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக பீளமேடு போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தான் காதலன் தனது புதுமனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றுவிட்டு கோவை விமான நிலையம் திரும்புவதை நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்ட இளம்பெண் விமான நிலையத்தில் கட்டம் கட்டி காத்திருந்து கடையை விரித்திருக்கிறார்.
இளம்பெண் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட திட்டமிட்டிருப்பதை அறிந்த இளைஞரின் தொழிலதிபர் தந்தை, முன்கூட்டியே தனது ஆதரவாளர்களை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்க, அந்த ஆதரவாளர்களில் ஒருவர்தான் புளூ சட்டை அணிந்து புதுமண ஜோடிகளை இளம்பெண்ணிடம் இருந்து எஸ்கேப் ஆக வைத்த நபர் என்றும் சொல்லப்படுகிறது.
இன்ஸ்டா காதலியை இளைஞர் திருமணம் செய்து கொண்டதற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை என்றும் வேண்டுமென்றே பணம் பறிக்கும் நோக்கி இளம்பெண் ரகளை செய்வதாகவும் இளைஞரின் உறவினர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.