வேன் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை அருகே வேன் மீது கார் மோதியதில் இரண்டு சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேன் தேவகோட்டை அருகே மணிமுத்தாறு பாலத்தில் வந்தபோது, அவ்வழியாக வந்த காரின் டயர் திடீரென வெடித்து, வேன் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

varient
Night
Day