வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை - வாபஸ் பெற நாளை மறுதினம் கடைசி நாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 40 தொகுதிகளிலும் மொத்தமாக ஆயிரத்து 437 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்த நிலையில் நிறைவு நாளான நேற்று மட்டும் 350-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்து 403 பேரும், புதுச்சேரியில் 34 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறும். வரும் 29 மற்றும் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறலாம். 30-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Night
Day