வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் - பெண்களுக்கு சேலைகள் வழங்கி உதவி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் சேதத்தை சந்தித்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா 2வது நாளாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், முதல் நாளான நேற்று, திண்டிவனம் மற்றும் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து 2வது நாளான இன்று திண்டிவனம் மற்றும் மயிலம் தொகுதிக்குப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் புரட்சித்தாய் சின்னம்மா, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் சிங்கனூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

புரட்சித்தாய் சின்னம்மாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். அவர்களின் வேதனைகளை புரட்சித்தாய் சின்னம்மா தாயுள்ளத்துடன் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.


Night
Day