விவசாயிகளை ஒருமையில் பேசிய எஸ்.ஐ.

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை ஒருமையில் பேசிய காவல் உதவி ஆய்வாளர், அவர்களை தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வேளாண் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பெறுவதை கண்டித்தும், ஏற்கனவே வாங்கிய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் நகைகளை அணிந்து வந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளிக்க சென்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் விவசாயிகளை ஒருமையில் தரக்குறைவாக பேசி தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Night
Day