தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களை விநியோகிக்க விதிக்கப்படும் கட்டுபாடுகளை பின்பற்றினாலேயே சிறப்பு உரிமம் வழங்கப்படுமென தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விளையாட்டு போட்டிகளில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளின் போது மதுபானம் விநியோகிக்க வேண்டியது அவசியம் என கோரிக்கை விடுக்கப்பட்டத்தையடுத்து சிறப்பு உரிமம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் தனி இடத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...