வாக்கு எண்ணும் மையங்களில் சத்யபிரதா சாகு ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் விதிமுறை தளர்வுகள் குறித்து அரசியல் கட்சிகள் வைக்கும் வேண்டுகோள் தொடர்பாக  தலைமை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை ஆய்வு செய்தார். கோடை வெப்பம் அதிகமாக உள்ளதால் சிசிடிவி கேமரா செயல்பாடுகள் , மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  சத்ய பிரதாசாகு தெரிவித்தார்.

Night
Day