ராமேஸ்வரத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் வேலை நிறுத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ராமேஸ்வரத்தில் கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோவில் பயணம் செய்துவிட்டு பேசிய பணத்தை கொடுக்காமல் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்ட போலீசார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Night
Day