ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், ராஜேஷ்தாஸின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. இதனிடையே ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Night
Day