மோடி மீண்டும் பிரதமராவாரா! - நடிகர் ரஜினிகாந்த் பதில்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆன்மிக சுற்றுலாவுக்காக இமயமலை புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த், மக்களவை தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படப்பிடிப்பில் இணையவுள்ளார். இதற்கு முன்னதாக ஒருவாரம் ஆன்மிக சுற்றுலாவுக்கு திட்டமிட்ட நடிகர் ரஜினிகாந்த், இமயமலை செல்வதற்காக போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்மீகப் பயணம் அடிக்கடி சென்று வருவது புத்துணர்ச்சி அளிப்பதாகவும், ஹரித்வார் மற்றும் மகாவதார் பாபாஜி குகையை பார்ப்பதற்காக இமயமலை செல்வதாகவும் தெரிவித்தார். மோடி மீண்டும் பிதமராவாரா? என்ற கேள்விக்கு அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என பதிலளித்தார். வைரமுத்து, இளையராஜா இடையேயான சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்கும் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

இதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு முறையும் ஆன்மீக பயணம் புதுவித அனுபவத்தை தருவதாகவும், ஆன்மீகம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே தேவையானது என கூறினார். 


Night
Day