வர்ணம் பூசி கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த தாம்பரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு வர்ணம் பூசி கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சீனி முருகன் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார், இவர் அப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில இளைஞருடன்  வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள மின்மாற்றியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day