மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு - தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் சேலம் மாவட்டம் பெரியார்நகர் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியவர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடியை எட்டியதால், தற்போது அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனை அறியாத முதியவர் சடையன் என்பவர், பெரியார் நகர் கால்வாயில் நின்றிருந்தபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு முதியவரை காப்பாற்றி கரை சேர்த்தனர். எனினும் முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நீர்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் முதியவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Night
Day