எழுத்தின் அளவு: அ+ அ- அ
இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற 16ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுநாள் நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று, இலங்கை போரில் உயிர்த்தியாகம் செய்த தமிழின உறவுகளுக்கு மலரஞ்சலியுடன் வீரவணக்கம் செலுத்தினார்.
இலங்கைப் போரில் தமிழினம் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், அதன் உச்சகட்டமாக 2009ம் ஆண்டு மே 18ம் தேதி பெரும்பாலான தமிழர்கள் அழிக்கப்பட்டனர். இந்த நாளை தமிழின படுகொலை நாளாக நினைவில் கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினத் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், அவர்களுக்கு எந்நாளும் தோளோடு தோள் நின்று பயணித்து வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற 16ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலரஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, இலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், மலர்வளையம் வைத்து புரட்சித்தாய் சின்னம்மா வீரவணக்கம் செலுத்தினார்.