மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் - கே. பாலகிருஷ்ணன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறினார். மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கே.பாலகிருஷ்ணன், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதை கண்டித்து வரும் 1ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Night
Day