எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு விளம்பர திமுக அரசுடைய காவல்துறையின் மெத்தனப் போக்கே முக்கிய காரணம் என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். 41 பேரின் உயிர் பறிபோக காரணமான திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், காவல்துறை மீது தவறு இருப்பதால் இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காவல்துறையின் ஒட்டுமொத்த தோல்வி என்றும் தமிழக அரசின் மிகப் பெரிய தவறு என்றும் குற்றம் சாட்டினார். பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை காவல்துறை ஒதுக்கி இருக்க கூடாது என்றும், மக்கள் நடமாட்டம் எப்படி உள்ளதை என்பதை பார்த்து இடத்துக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கூறினார்.