மாவட்ட ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்காததற்கு மாவட்ட ஆட்சியரே காரணம் என்றும் ரயில்வே துறை குற்றம் சாட்டியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு  ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு முதற்கட்ட விளக்கமளித்த தெற்கு ரயில்வே நிர்வாகம் பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டை திறக்குமாறு வலியுறுத்தியதால் கேட் கீப்பர் அனுமதித்தாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டுக் கொண்டாலும் ரயில் இயக்க பாதுகாப்பு விதிகளின்படி கேட்டை மூடாமல் பள்ளி வாகனத்தை கடக்க அனுமதித்து விதிகளை மீறியதால் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பங்கஜ் சர்மாவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்ட இந்த விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.   விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டரை லட்சம் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தவிர செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்காததற்கு ஒரு ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்காததே காரணம் என்றும் தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது. சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே துறை தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் மாவட்ட ஆட்சியர் அனுமதி தரவில்லை என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Night
Day