மாமல்லபுரத்தில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட மேலும் ஒரு மாணவர் உடல் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடலில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு ஆந்திர மாணவரின் உடல் மீட்கப்பட்டது.

ஆந்திராவில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த அரசு கல்லூரி மாணவர்கள் 30 பேர், கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 10 பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர், கடலில் தத்தளித்த 5 பேரை பத்திரமாக மீட்டனர். நேற்று விஜய் என்ற மாணவரின் சடலம் மீட்கப்பட்டது. 2வது நாளாக தீயணைப்பு துறையினர் மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழ்நாடு ஹோட்டல் அருகே சேஷா ரெட்டி என்ற மாணவரின் சடலத்தை மீட்டனர். இதனைத்தொடர்ந்து மற்ற 3 மாணவர்களையும் தேடி பணி நடைபெற்று வருகிறது.  

Night
Day