மதுரை முல்லைநகர் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கு சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை முல்லைநகர் பகுதியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்குள்ள வீடுகளில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள திமுக அரசுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் விரோத நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு, தேர்தல் நேரத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிப்படி, இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என விளம்பர திமுக அரசை, புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பி.குளம் கண்மாயை ஒட்டிய முல்லைநகர் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், திடீரென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, தமிழக நீர்வளத்துறை சார்பில், இங்குள்ள வீடுகளில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த மக்கள் விரோத நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான அரசை, புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்புகளை அகற்றவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரியும், தேர்தல் நேரத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிப்படி தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறியும், முல்லை நகர் பகுதி மக்கள் கடந்த ஐந்து நாட்களாக தெருக்களில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - மதுரை பி.பி.குளம் கண்மாயில் அதிக அளவிற்கு ஆக்கிரமிப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, முல்லை நகர் பகுதியில் 60ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த திமுக அரசு துடிக்கிறது - இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் , வீட்டு வரி , பாதாள சாக்கடை வரி என அனைத்து விதமான வரிகளும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்கிரமிப்பு எனக் கூறி இங்குள்ள வீடுகளை அகற்றுவது மிகவும் கண்டனத்திற்குரியது என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

திமுக தலைமையிலான அரசு இந்த வழக்கில் சரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைத்து இருக்கலாமே? - நீதியரசர்களுக்கு இப்பகுதி மக்களின் நிலையினை சரியாக எடுத்து சொல்லியிருக்கவேண்டும் - அவ்வாறு வாதங்களை எடுத்து வைத்து இருந்தால் இப்பகுதி மக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு உத்தரவினை பெற்று இருக்க முடியும் - அதை செய்யத் தவறிவிட்டு, இப்பொழுது நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, சாமானிய மக்களின் வாழ்வை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே, இது தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இங்கு குடியிருப்பவர்களை மறு குடி அமர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும், மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் அடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரியவருகிறது - இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், இந்த பகுதி மக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலும், வீடுகளை காலி செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான அரசு மக்களை விரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? என்று புரட்சித்தாய் சின்னம்மா வினவியுள்ளார். 

இப்பகுதி மக்கள், தங்களுக்கு வகை மாற்றம் செய்து, முல்லை நகர் பகுதியில் பட்டா வழங்க வேண்டும் எனவும், மாற்று ஏற்பாடாக முல்லை நகரின் அருகே இருக்கக்கூடிய 5 கிலோமீட்டர் தூரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் - 

எனவே, திமுக தலைமையிலான அரசு மதுரை முல்லை நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - மேலும், தேர்தல் நேரத்தில் திமுகவினர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day