மணமக்களுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தாய் சின்னம்மா ஆகியோரின் விசுவாசி, எம்.ஜீவராஜ் ஜெயின் இல்லத் திருமண விழாவில், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா, மற்றும் புரட்சித்தாய் சின்னம்மா ஆகியோரின் விசுவாசி, எம்.ஜீவராஜ் ஜெயின் இல்லத் திருமண விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருமண மண்டபத்திற்கு வருகை தந்த, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, திருமண வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருமண விழாவில், புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு, மணமக்கள் டாக்டர் வர்ஷா, மற்றும் டாக்டர் பிரகாஷ்ஜி ஆகியோருக்கு பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மணமக்கள் இருவரும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆசி பெற்றனர்.

திருமண வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த ஏராளமானோர், புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, வாழ்த்துப் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் L.K.M.B. வாசு, பரங்கிமலை முன்னாள் ஒன்றியக்கழக செயலாளர் மேடவாக்கம் எஸ்.காளிதாஸ், தென்சென்னை மாவட்டக் கழக துணைச் செயலாளர் வேளச்சேரி s.சின்னதுரை மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


varient
Night
Day