மக்கள் வெள்ளத்தில் பிரதமர் ரோடு ஷோ... எழுச்சிமிகு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பங்கேற்க திருச்சியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில், சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டு மலர்தூவி வரவேற்றனர்.

ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்ட பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தினார். திருச்சியில் மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார்.

பிரதமர் மோடி காரில் இருந்தபடி மக்களை நோக்கி கையசைத்தார். அப்போது, வழிநெடுகிலும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர்.

இதை தொடர்ந்து, பொன்னேரியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் சென்ற பிரதமர் மோடி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். அப்போது, பிரதமர் மோடி சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். மேளதாளம் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day