மகா விஷ்ணுவுக்கு வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் பிற்போக்கு பேச்சாளருமான மகாவிஷ்ணுவுக்கு வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கடந்த 7ஆம் தேதி மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 20ம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டுள்ளார்.

varient
Night
Day