போராட்டத்தில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

2009ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு உள்ளே புகுந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வழக்கறிஞர் சங்கங்கள் கருப்பு தினமாக அனுசரித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆவின் வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தை நடத்த முயற்சித்த போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது காவல்துறைக்கு எதிராகவும், அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பப்பட்டது . இந்த போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் சமாதானபுரத்திலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர் உள்ளே புகுந்து நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.


Night
Day