பூப்பெய்திய மாணவிக்கு நேர்ந்த அவலம் - பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல்  வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைத்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாணவி தனியாக தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெகமம் காவல்துறையின் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளரிடம் முழு அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாகவும், அந்த அறிக்கை வந்த பின்னர் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, மாணவி படிக்கும் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day