புரட்சித்தாய் சின்னம்மாவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும், மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் அம்மாவின் பெயரைத் தாங்கி நிற்கும் புதிய இல்லமான, ஜெயலலிதா இல்லத்தில், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிலையில், போயஸ் கார்டன், ஜெயலலிதா இல்லத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அவரை அன்புடன் வரவேற்றார். சின்னம்மாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்திடம், இந்த சந்திப்பின் முக்கியத்துவம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், புதிய வீட்டின் கிரஹப் பிரவேஷம்தான் முக்கியத்துவம் என்று குறிப்பிட்டார். புதிய வீடு, கோயில் போல் இருப்பதாகவும், இங்கு, சின்னம்மா, எல்லா புகழும், சந்தோஷமும், நிம்மதியும் பெற்று வாழவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

varient
Night
Day