புரட்சித்தாய் சின்னம்மா அன்னையர் தின வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்னையர் தினத்தையொட்டி, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தாய்மை உள்ளம் படைத்த அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா, ஒரு தாயின் இடத்திலிருந்து மக்களுக்கு வாரி வழங்கிய ஏராளமான நலத்திட்டங்களை புரட்சித்தாய் சின்னம்மா பட்டியலிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில், உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லையென்றும், தேடித்தேடி அலைந்தாலும் மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம் தாயின் கருவறை என்றும் தெரிவித்துள்ளார். 

அன்னையர்களின் நிபந்தனையற்ற அன்பு, ஆதரவு மற்றும் தியாகங்களால் தான் ஒவ்வொருவரும் நல்ல மனிதராகிறோம் - தாய்மை உள்ளம் படைத்த அனைவருக்கும் தனது இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”,“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” என்ற பாடல் வரிகள் தாய்மையின் பெருமைகளையும், சிறப்புகளையும், புனிதத்துவத்தையும் அனைவருக்கும் உணர்த்துகிறது - இறைவன் அனைத்து உயிர்களோடும் உடனிருந்து காப்பாற்றிட வேண்டி, தனது பிரதிநிதியாக தாயைப் படைத்துள்ளார் - தாயிடம் மட்டுமே களங்கமில்லாத ஆதரவும், கலப்படமில்லாத பாசமும் காண முடியும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவிடம் தமிழக மக்கள் உண்மையான தாயின் பாசத்தையும், அன்பையும் உணர்ந்தார்கள் - “அம்மா என்றால் அன்பு” என்ற பாடலுக்கு ஏற்ப தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா, தமிழக மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் - ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம், அறிவை வளர்க்க விலையில்லா மடிக்கணினி, தடையின்றி கல்வி கற்க விலையில்லா மிதிவண்டி என, பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள், அனைவரும் பசியாற அம்மா உணவகம், தாகத்திற்கு தண்ணீர் என ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை, ஒரு தாயின் இடத்தில் இருந்து தமிழக மக்களுக்கு வாரி வழங்கினார் - புரட்சித்தலைவி அம்மா, மக்களுக்காக ஆற்றிய அரும்பணிகளை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைவதாக, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

“தாய் இல்லாமல் நான் இல்லை, தானே எவரும் பிறந்ததில்லை” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை மனதில் வைத்து, ஒவ்வொருவரும் அன்னையரை மதித்து போற்றுவோம் - அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் கொண்டு, வாழும் கடவுளாக திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day