புரட்சித்தலைவர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்ற ஆ.ராசா : புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்ற ஆ.ராசா, எம்.ஜி.ஆரை. பற்றி இழிவாக பேசுவதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் 

2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் ஆ.ராசாவுக்கு என்னசெய்வதென்று தெரியாமல் "பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற மனநிலையில் கண்டதையும் பேசி வருவதாக விமர்சனம்

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக புரட்சித்தலைவரை இகழ்ந்து ஆ.ராசா பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது - புரட்சித்தலைவரை பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை என புரட்சித்தாய் சின்னம்மா காட்டம்

மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் புரட்சித்தலைவரை பற்றி இழிவாக பேசுவதை வேடிக்கை பார்க்கும் திமுக தலைமைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம்

உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா? என்ற பழமொழிக்கேற்ப ஆ.ராசா போன்ற வாய்ச்சவடால் வீரர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

varient
Night
Day