வங்கக்கடலில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் வரும் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, 14ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியிலும், 19ம் தேதி அந்தமானை ஒட்டியும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Night
Day