தமிழகம்
புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வ...
புதுக்கோட்டை மாவட்டம் எருச்சி சிதம்பர விடுதி பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கியை அடுத்த எழுச்சி சிதம்பர விடுதி பகுதிகளில் ஒரு மாத காலமாக குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சிலட்டூர் எருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அறந்தாங்கி காவல் துணை ஆய்வாளர் இளமாறன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வ...
சென்னை அசோக் நகரில் மரத்தின் மீது கண்டெய்னர் வேன் மோதி விபத்துக்குள்ளானத...