புதிய இல்லத்தில் புரட்சித்தாய் சின்னம்மா கோ பூஜை செய்து வழிபட்டார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில், புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்திற்கு எதிரே அமைந்துள்ள புதிய இல்லத்தில் கோபூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சென்னை போயஸ் கார்டனில், புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்திற்கு அருகே அமைந்துள்ள அருள்மிகு ஜெயவிநாயகர் திருக்கோவிலில், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, விநாயகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்திற்கு எதிரே அமைந்துள்ள புதிய இல்லத்தில் கோ பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். 

அதன்பின்னர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.Night
Day