பாலியல் வன்கொடுமை - தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளி சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த தனியார் பள்ளி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் 38 சிசிடிவிக்களும், பள்ளி பேருந்துகளில் GPS கருவிகளும் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Night
Day