தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளிபட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் பைகளை சோதனை செய்தனர். அப்போது, 7 மாணவர்களிடம் சிறிய வெள்ளை நிற பைகளில் இருந்து குட்கா பொருட்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை, மாணவர்கள் வகுப்பறையில் பயன்படுத்தியதும் தெரியவந்ததை அடுத்து 7 மாணவர்களும் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...