பல அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறும் தண்ணீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் நடூர் பகுதியில், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் பிறீட்டு அடித்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சி மற்றும் அதன் வழியோர கிராமங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் மேட்டுப்பாளையம், பவானி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நிலையில், நடூர் பகுதியில், திடீரென பெரிய உடைப்பு ஏற்பட்டு, சுமார் 40 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இந்த காலகட்டத்தில், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவது கவலை அளிப்பதாக சுற்றுவட்டார கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி உடனடியாக இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day