பயணிகள் முன்னிலையில் தாக்கி கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வழி விடுவதில் ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள், தாக்கி கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை கொரட்டூர் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த, L70 எண் கொண்ட மாநகர பேருந்தை ஓட்டுநர் சிவானந்தம் இயக்கியுள்ளார். அப்போது முன்னாள் சென்ற மற்றொரு அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழிவிடுமாறு கூறியுள்ளார். அப்போது இருதரப்பிற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றொரு பேருந்தில் இருந்த ஓட்டுநர் புண்ணியமூர்த்தி மற்றும் நடத்துனர் பாலகுமார் ஆகியோர் L70 பேருந்தில் ஏறி, ஓட்டுநர் சிவானந்தத்தை சரமாரியாக தாக்கினர். பயணிகள் முன்னிலையில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள், தாக்கி கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

varient
Night
Day