கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா - புரட்சித்தாய் சின்னம்மா இன்று பங்கேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலை நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இன்று நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு ஆதரவற்ற முதியவர்களுடன் இணைந்து விழாவை சிறப்பிக்க உள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித்தலைவி அம்மா, கிறிஸ்தவப் பெருமக்களோடும், கழகத் தொண்டர்களோடும் கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்புடன் கொண்டாடியதாகவும், அதே போன்று இந்த ஆண்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று காலை 11 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலை நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசு குடில் முன்பாக நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், கிறிஸ்தவ பெருமக்கள், ஆதரவற்ற முதியவர்கள், கழக நிர்வாகிகள், கழகத்தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day