கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார் புரட்சித்தாய் சின்னம்மா...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலை நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடி சிறப்பித்தார். கேக் வெட்டியும், ஆதரவற்ற முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கியும் புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ந்தார்.

கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். புரட்சித்தலைவி அம்மா, ஒவ்வொரு ஆண்டும்  கிறிஸ்தவப் பெருமக்களோடும், கழகத் தொண்டர்களோடும் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினார். அதேபோன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவும் சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலை நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த புரட்சித்தாய் சின்னம்மா, நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இயேசுபிரானை வணங்கி பிரார்த்தனை செய்தார்.

இதனையடுத்து, நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மூத்த அருட்சகோதரி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும், அருட்சகோதரிகள் உள்ளிட்டோரும் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்று மகிழ்ந்தனர்.

தொடர்ந்து உலக நன்மை வேண்டி அருட்சகோதரி மற்றும் பிஷப் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தார். மேலும் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும், 2026 தேர்தலில் சின்னம்மா வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் கருணை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசு குடில் முன்பு புரட்சித்தாய் சின்னம்மா கேக் வெட்டி ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். அருட்சகோதரிகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் உள்ளிட்ட அனைவருக்கும் புரட்சித்தாய் சின்னம்மா கேக் வழங்கி மகிழ்ந்தார்.

பின்னர் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, கருணை இல்லத்தில் உள்ள முதியோருக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உணவு பரிமாறி மகிழ்ந்தார். 

இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், போதகர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவ பெருமக்கள், ஆதரவற்ற முதியவர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Night
Day