சென்னையில் 6-வது நாளாக போராட்டம் - செவிலியர்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்ப திமுக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தது. கடந்த நான்கரை ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விளம்பர திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக செவிலியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  இந்தநிலையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, விளம்பர திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாடு சங்கத்தினர் கைது செய்யப்பட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தநிலையில், செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையில், பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக அரசு எந்த  வாக்குறுதியும் அளிக்காததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து அடுத்து, தொடர்ந்து 6வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் படப்பை மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது, அடக்குமுறையை கைவிட வலியுறுத்தியும், கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை கைது செய்வது நியாயம் தானா என விளம்பர திமுக அரசுக்கு எதிராக செவிலியர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். 

Night
Day