நெல்லை: வெள்ளத்தால் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த பாலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அயன் திருவாலீசுவரம் கோவில் பகுதியில் உள்ள சாலையை பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவில் அருகே உள்ள பாலம், டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் கரைகள் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் சேதமானது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், தங்கள் சொந்த செலவில் சிறிய இரும்பு பாலம் அமைத்து நடந்து செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் அறுவடை பணிகள் தொடங்கவுள்ள நிலையில், பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

varient
Night
Day