நெல்லை: திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

யானைக் கூட்டம் குட்டிகளுடன் உலா வருவதால் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. நம்பி கோவிலுக்கு தமிழ் மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். கடந்த வாரம் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றதால் 27-ம் தேதி வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 28-ம் தேதி முதல் பக்தர்கள் நடந்து செல்ல மட்டும் அனுமதி அளித்த நிலையில் யானைக் கூட்ட நடமாட்டம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மறு உத்தரவு வரும் பக்தர்கள் நம்பி கோவிலுக்குச் செல்ல வனத்துறை நேற்று முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Night
Day