நாமக்கல்: ஆனங்கூர் ரயில்வே கேட்டில் டிப்பர் லாரி மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் ஆனங்கூர் ரயில்வே கேட்டில் டிப்பர் லாரி மோதி விபத்தானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெப்படை - திருச்செங்கோடு வழித்தடத்தில், சென்ற டிப்பர் லாரி ஆனங்கூர் ரயில் கேட்டில் எதிர்பாராத விதமாக மோதி நின்றது. இதில் கேட் பழுதாகி திறக்க முடியாத சூழ்நிலை உருவானதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், கார்கள், பைக்குகள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

Night
Day