நண்டலாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் நண்டலாறு பகுதியில் 9-வது நாளாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு கடந்த 2ம் தேதி பொதுமக்கள் புகாரளித்தனர். இதனை அடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கடந்த 9 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நண்டலாறு பகுதியில் தேவையான குடிநீர் மற்றும் உணவு இருப்பதால் அந்த பகுதியில் சிறுத்தை முகாமிட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Night
Day