தேர்தலுக்கு முன்பே பொருட்கள் பட்டுவாடா... ஆட்டத்தை ஆரம்பித்த உடன்பிறப்புகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், தேர்தலுக்காக முதற்கட்டமாக பொருட்கள் பட்டுவாடாவை தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளை கவரும் வகையில் சில்வர் பொருட்களை சம்படங்களை வழங்கி வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கட்சி மாறுதல், தொகுதி மாறுதலுக்கு பெயர் போனவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தற்போதைய விளம்பர திமுக ஆட்சியில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை தறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். திமுகவில் அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி கை ஓங்கி காணப்பட்டது.

அவர் ஆடிய ஆட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல், ஊழல் வழக்கு இடி போல் வந்து விழுந்தது. ஊழல்வாதி செந்தில் பாலாஜி என்று எதிர் கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் சொல்லிய குரல் வருமானவரித்துறை அதிகாரிகளின் கதவை தட்டி திறந்தது.

அப்போது அமைச்சராக இருந்தபோது சுழன்ற செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோச்குமார் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என வருமானவரித்துறையினர், அமலாக்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில், முறைகேடுகள் நடைபெற்றது உறுதியானதையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என ஜாமீன் கேட்டு போராடி வரும் செந்தில் பாலாஜிக்கு பினை கிடைக்காமல், 24-வது முறையாக அவரது சிறை வாசத்தை உறுதிப்படுத்தியது நீதிமன்றம்.

250 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜியை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் திமுக உடன்பிறப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி செந்தில் பாலாஜியின் தொகுதியாக இருந்த கரூரில், தேர்தலுக்காக பொருட்கள் பட்டுவாடாவை தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்குவதில் வல்லமை பெற்றவர் செந்தில் பாலாஜி என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கூறியுதை மெய்யாக்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் ராயனூர் பகுதிமயில் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளை கவரும் வகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய பெட்டியில் Stainless Steel பாத்திரங்களை வழங்கி வருகின்றனர்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை கூட அறியாத திமுக உடன்பிறப்புகள், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று அச்சடிக்கப்பட்ட அட்டை பெட்டியில் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் திமுகவினர் இரவில் வீடு வீடாக சென்று பரிசு பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். 

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், இவர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பரிசு பொருட்கள், ஓட்டுக்கு துட்டு, ஆகியவற்றை வாக்காள பெருமக்கள் தவிர்த்து, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, அனைவரும் நேர்மையான முறையில், வாக்களிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

varient
Night
Day