தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விவசாய நிலம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொப்பையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு, அப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலையில் தனது வயலுக்கு முன்பு உள்ள மற்றொருவரின் தோட்டத்தில் உள்ள பொதுப்பாதை வழியாகவே காமராஜ் தனது நிலத்திற்கு செல்ல வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், பொதுப்பாதையை பயன்படுத்த அந்த நிலத்தின் உரிமையாளர் மறுத்து வந்த நிலையில் காமராஜின் நிலம் திடீரென தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின்படி ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...