தென்காசி: வெடி மருந்துகள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் : VAO, VAR பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வெடி மருந்துகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக விஏஒ உள்ளிட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கொக்குகுளம் கிராமத்தில் வெடி தயாரிப்பதற்காக அனுமதியின்றி வீட்டில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்த வெடிமருந்துகள் வெடித்து சதீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார், அவரது மனைவி காயமடைந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தது. இதனிடையே வீட்டில் பதுக்கி வைத்து வெடி தயாரித்த சம்பவம் தொடர்பாக ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியருக்கு தகவல் அளிக்காததாக, சாயமலை கிராம நிர்வாக அலுவலர் சந்தனபூபதி,  கிராம நிர்வாக உதவியாளர் மாரியப்பன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

varient
Night
Day