தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாலத்தில் ஊர்ந்து சென்ற மலை பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. கடையம் அருகே வீரா சமுத்திரம் - ரவண சமுத்திரத்திரம் ஆற்றுப் பாலத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு பாலத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு இருப்பது தெரிய வந்தது. இதனிடையே பாம்பை அவர் மீட்க முயன்றபோது அவரது கையை சுற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...