எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வேப்பேரியில் 5 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சி 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களை சார்ந்த தூய்மை பணியாளர்கள் தங்கள் இழந்த வேலையை திரும்ப கேட்டு ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் இன்று, சென்னை வேப்பேரியியல் உள்ள மணியம்மை சிலை முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். பெண்களின் உரிமைக்காக போராடிய மணியம்மையிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். சமூக நீதி பேசும் இந்த அரசு தூய்மை பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.