எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏமாற்றிக் கொண்டு காலத்தை கழித்துவிட்ட விளம்பர திமுக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் புரட்சித் தலைவி அம்மா ஆட்சி மீண்டும் அமையும் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரைத்துள்ளார். நிர்வாகம் செய்யத் தெரியாத விளம்பர திமுக ஆட்சி மக்களை பிழிந்து எடுப்பதாகவும், விளம்பரம் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை விளம்பர திமுக அரசு நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். சாதாரண மக்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடியாத நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தவே முடியாதது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா தமது பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இனிப்புகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு செய்தியாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.