தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரியில் வீட்டின் பூட்டை உடைத்து 111 சவரன் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

ஆழ்வார்திருநகரி அருகே கேம்பலாபாத் பகுதியில் வசித்து வருபவர் சபீனா. கணவர் துபாயில் பணியாற்றி வரும் நிலையில், சபீனா தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு, உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு 111 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சபீனா அளித்த புகாரின் பேரில், ஆழ்வார்திருநகரி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Night
Day